தனுஷ், மிருணாள் தாக்குர்.  படங்கள்: இன்ஸ்டா / தனுஷ், மிருணாள் தாக்குர்.
செய்திகள்

தனுஷ் பதிவில் கமெண்ட் செய்த மிருணாள் தாக்குர்..! காதலா, நட்பா?

நடிகர் தனுஷின் பதிவுக்கு, நடிகை மிருணாள் தாக்குரின் கமெண்ட் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் பதிவுக்கு, நடிகை மிருணாள் தாக்குர் பகிர்ந்த கமெண்ட் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கெனவே இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவிவரும் நிலையில் இந்த கமெண்ட் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் வாரணாசி சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் குந்தன் கதாபாத்திரத்தை மறக்க முடியாது என நெகிழ்சியாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவில் நடிகை மிருணாள் தாக்குர், “தனுஷ் சார்... என்ன ஓர் அழகான பயணம்! பிளாக்பஸ்டர்!! கல்ட்!!! லெகசி!!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கமெண்டிற்கு தனுஷ் கட்டியணைப்பது போல் ஒரு எமோஜியும் வெள்ளை இதய எமோஜியையும் பதில் அளித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

சமீபத்தில் அடிக்கடி அவர்கள் எதாவது நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகின்றன.

விவாகரத்து பெற்ற தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், “காதல் என்பது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு” எனக் கூறினார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கிய தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Mrunal Thakur's latest comment on Dhanush’s post adds fuel to dating rumours: 'What a beautiful journey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT