FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

க்யூட் வாலா - மிருணாள் தாக்கூர் பிறந்த நாள்! ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை மிருணாள் தாக்கூர் பிறந்த நாள் இன்று...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 4:59 pm IST
மிருணாள் தாக்கூர்
பகிர்:

நடிகை மிருணாள் தாக்கூரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

நடிகைகளுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் போதும் அவர்களை இந்திய சினிமா ’அலேக்காக’த் தூக்கிக் கொண்டாட... அப்படித்தான், நடிகை மிருணாள் தாக்கூருக்கு சீதா ராமம் திரைப்படத்தின் நூர்ஜஹான் கதாபாத்திரம் உச்சத்திற்குக் அழைத்துச் சென்றது. அதன்பின், வலுவான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்றாலும் இந்தியளவில் நட்சத்திர நடிகையாக ஜொலிப்பதுடன் ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாகியுள்ளார்.

கிளாமரான தோற்றம், கச்சிதமான முகவெட்டு என அழகான நடிகையாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பல தயாரிப்பாளர்களும் மிருணாளை ஒப்பந்தம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் பிப். 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், காதல் மற்றும் திருமணம் குறித்து பேசிய மிருணாள், “காதல் என்பது அழகான உணர்வு. அது எல்லாருக்கும் அமைய வேண்டும். அது ஒருவரை மேம்பட்ட நபராக மாற்றும் சக்தி கொண்டது. காதலில் இருப்பவர்கள் ஒருவருக்கு இன்னொருவர் கொடுப்பவராக இருக்க வேண்டும். அதில் ஆண் - பெண் பேதமில்லை.

மிருணாள் தாக்கூர்

சில நேரங்களில் காதலை ஏற்றுக்கொள்வதிலும் அங்கீகரிப்பதிலும் சிரமம் இருக்கலாம். ஆனால், அதன் முழுமை ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. காதலுக்கான வரையறைகள் காலத்திற்கு ஏற்ப மாறினாலும், காதல் எப்போது மாறுவதில்லை. நீங்கள் ஒருவரைக் காதலித்தால் அவரிடம் முழுமையாக சரணடையுங்கள்” எனக் கூறியிருந்தார். மேலும், திருமணம் குறித்த சர்ச்சைகளுக்குப் பொதுவாக, ‘வதந்தி’ என முடித்துக்கொண்டார். தற்போது, கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலும் மிருணாளும் ’டேடிங்’ செய்வதாக செய்திகள் பரவி வருகின்றன!

இந்த நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் தன் 34 பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக, இந்தியளவிலுள்ள அவரது ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி, தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டாலும் ஏன் தமிழ் சினிமா மிருணாளைப் பயன்படுத்தவில்லை என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, சீக்கிரம் கோலிவுட் என்ட்ரி அமையட்டும்!

Fans are extending their wishes on the occasion of actress Mrunal Thakur's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments