FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

33 வயது நடிகை மிருணாள் தாக்குர், 24 வயது கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் டேட்டிங்?

மிருணாள் தாக்குர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் காதலிப்பதாக பரவும் வதந்தி பற்றி...

Updated On : 27 ஜூலை 2026, 3:46 pm IST
நடிகை மிருணாள் தாக்குர், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - x
பகிர்:

நடிகை மிருணாள் தாக்குரும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவும் காணொலி வதந்திகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின.

அஜய் தேவ்கன் - மிருணாள் தாக்குர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார் - 2’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் மிருணாள் தாக்குருடன் இணைந்து தனுஷ் பார்வையிட்டது, வதந்திகளுக்கு வலுசேர்த்தது. இதுதொடர்பாக இருவரும் கருத்து தெரிவிக்காத நிலையில், அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 33 வயதான மிருணாள் தாக்குர், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான 24 வயது ஜெய்ஸ்வாலை காதலிப்பதாக இணையத்தில் காணொலி ஒன்று பரவி வருகின்றது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை, மேற்கு பாந்த்ராவில் உள்ள பிரபல ’கஃபே ஷாப்’பில் மிருணாள் தாக்குரும், ஜெய்ஸ்வாலும் இருப்பது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

அந்தக் காணொலியில், ’கஃபே ஷாப்’பில் மிருணாள் தாக்குர் நின்று கொண்டிருப்பதைப் போன்றும், அங்கிருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால் காரில் ஏறிச் செல்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காணொலியைப் பகிர்ந்து, இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், டேட்டிங்கில் உள்ளார்கள் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர், இருவரும் இணைந்து விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலங்களை இணைத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவது இது முதல்முறையல்ல. சில நேரங்களில் உண்மையாகியிருக்கிறது, சில நேரங்களில் வதந்திகளாகவே கடந்திருக்கிறது.

summary

33-year-old Mrunal Thakur dating 24-year-old cricketer Yashasvi Jaiswal?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments