சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் நடிக்கும் தனுஷ்! இயக்குநர் இவரா?
நடிகர் தனுஷின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் தனுஷ் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் நடிகை கரினா கபூர் நாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பிஎஸ் மித்ரன் இயக்கிய சர்தார் - 2 திரைப்படம் வருகிற செப். 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Dhanush is set to act in a film produced by renowned director Sanjay Leela Bhansali.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.