திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!
டாக்ஸிக் திரைப்படம் குறித்து...
நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டபடி டாக்ஸிக் அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் வாமிகா கபி!
actor yash's toxic movie will release on planned date
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.