ஜீ தமிழ் தொடர் நடிகைகள்... படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த நடிகை யார் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த நடிகை யார்? என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான தொடரின் நாயகிக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் நடிகை மக்கள் மனம் கவர்ந்த சின்ன திரை நடிகையாகத் தேர்வு செய்யப்படுவார்.

சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளுக்கு இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெகுஜனங்களைக் கவரும் வகையிலான தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட பாரிஜாதம், திருமாங்கல்யம் எனப் புதிய தொடர்கள் அறிமுகமாகியுள்ளன.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களை வைத்தும் தொடர்களை தயாரித்து அதனை ஒளிபரப்பி வருகிறது. சினிமாவில் வாய்ப்பு குறைந்த நாயகிகள் சின்ன திரையில் நாயகியாக நடிக்க வருவதுமாறி, தற்போது சின்ன திரையில் நடித்தே பிரபலமாகும் நாயகிகளும் உருவாகியுள்ளனர்.

இவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களும் சேர்ந்துள்ளனர். சினிமா நாயகிகளுக்கு இருக்கும் அளவுக்கு சின்ன திரை நாயகிகளின் பதிவுகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கின்றன.

சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்குச் செல்லும் அளவுக்கு அவர்களுக்கான அங்கீகாரமும் உயர்ந்துள்ளது. சின்ன திரையில் நடிப்பவர்களை அங்கீகரிக்கும் விதமாக தொலைக்காட்சி நிர்வாகமே விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது.

அந்தவகையில், சின்ன திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை யார்? என்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதற்கான போட்டியில் கெட்டி மேளம் தொடரின் நாயகி சாயா சிங், கெட்டி மேளம் தொடர் செளந்தர்யா ரெட்டி, அண்ணா தொடர் நித்யா ராம், அயலி தொடர் தேஜஸ்வினி, வீரா தொடரின் நாயகி வைஷ்ணவி, கார்த்திகை தீபம் தொடரின் நாயகி ரேவதி ஆகியோர் உள்ளனர். இதில், தங்களுக்கு விருப்பமான நடிகைக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.

இதையும் படிக்க | குக் வித் கோமாளி -6 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன்!

Best actress in zee tamil serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகிகள் உள்பட மூவர் கைது

கரூர் பலி: நாமக்கல் காவல் நிலையத்தில் FIR பதிவு! | செய்திகள்: சில வரிகளில் | 29.9.25

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT