ஆண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டு அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் பிரதீப் ஆண்டனி. இந்நிகழ்ச்சியில் குறுகிய காலமே இருந்தாலும், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.
Advertisement
Advertisement
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சூழ்ச்சியின் மூலம் வெளியேற்றப்பட்டதாக ரசிகர்கள் பலர் பிரதீப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, உதவி இயக்குநராக இருந்த இவர், அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
சினிமாவில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருப்பதாக பிக் பாஸ் வீட்டில் பிரதீப் தெரிவித்திருந்தார். இதனிடையே 2024 நவம்பர் 7 ஆம் தேதி, பிரதீப் தனது நீண்டநாள் காதலியான பூஜாவை திருமணம் செய்துகொண்டார்.
பிரதீப் - பூஜா தம்பதிக்கு சமீபத்தில் வளைகாப்பு விழா நடந்த நிலையில், இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தையை கையால் கட்டியணைத்தபடி தூக்கி, அன்போடு பார்க்கும் புகைப்படத்தையும் பிரதீப் பகிர்ந்துள்ளார். பிரதீப்புக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Actor Bigg Boss Tamil fame Pradeep Antony blessed with baby boy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.