முகப்பு
செய்திகள்

இன்று மாலை வெளியாகிறது 'கருப்பா கூட வா' பாடல்!

'கருப்பா கூட வா' வெளியீடு குறித்து...

Updated On : 28 ஏப்ரல் 2026, 3:01 pm IST
ஆர்.ஜே. பாலாஜி - படம்: எக்ஸ்
பகிர்:

கருப்பு படத்தில் இடம்பெற்றுள்ள 'கருப்பா கூட வா' பாடல் இன்று(ஏப். 28) மாலை வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”.

நீண்ட நாள்களாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் கருப்பு வெளியீட்டுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஏப். 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில், சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இந்த நிலையில் கருப்பு படத்தின் 4வது பாடல் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் “கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

The film's director, R.J. Balaji, has announced that the song Karuppa Kooda Vaa from the movie Karuppu will be released this evening (April 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments