சீரடியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த நடிகை கனிகா!
சீரடியில் சாமி தரிசனம் செய்த விஜய்யை நடிகை கனிகா சந்தித்தது குறித்து...
சீரடியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நடிகை கனிகா சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர். அவருடன் சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு மே மாத வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கனிகா பகிர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 4 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய், தற்போது ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
Advertisement
நேற்று திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சீரடி சென்ற விஜய், அங்கு சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்தார்.
கடைசியாக கோட் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பு சீரடிக்குச் சென்று விஜய் சாய்பாபா தரிசனம் செய்திருந்தார். அதன் பிறகு தற்போது வாக்குப் பதிவு முடிந்த பிறகு சீரடிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சீரடியில் விஜய்யை நடிகை கனிகா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனிகா பகிர்ந்து, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் உடன் எடுத்துக்கொண்ட படங்களைப் பகிர்ந்து கனிகா பதிவிட்டுள்ளதாவது:
''விஜய் உடன் திரையைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மனிதராக அவரை இன்று பார்ப்பது அற்புதமான தருணம். பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அவரைச் சுற்றி நின்றுபோக, ஒரு நொடி நின்று எங்களை அடையாளம் கண்டு சில பண்பான வார்த்தைகளைப் பேசினார். வெற்றிக்கான சக்தி உங்களுடன் இருக்கட்டும் விஜய். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Actress Kanika Meets TVK Leader Vijay in Shirdi shared photos goes viral
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.