FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமரா? தமிழிசை பதில்

முதல்வர் விஜய் பிரதமராவது என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய் பிரதமராகிறாரா என்ற கேள்விக்கு, அவர் முதலில் முதல்வர் பதவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்தான், 2029-ல் பிரதமராகும் வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பரவி வருவதைக் குறிப்பிட்டு, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "முதல்வர் விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளனர். அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

பிரதமர் மோடிக்கு இணையாக இன்னொருவரைச் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், மோடி 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 12 ஆண்டுகளாக பிரதமராக இருப்பதுடன், 25 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார். முதல்வர் பதவியில் தொடங்கி ஒரு நெடுங்கால அரசியல் வாழ்க்கையைப் பெற்றவர்.

முதல்வர் விஜய், தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் அதனை அவர் சரியாகச் செய்ய வேண்டும். அவர் முதல்வராகி 3 மாதங்கள்தான் ஆகியுள்ளன" என்று தெரிவித்தார்.

summary

Is CM Vijay the next Prime Minister? BJP Leader Tamilisai Soundararajan responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments