ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஓ சுகுமாரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக....
ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ஓ... சுகுமாரி.
இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
கிராமிய காதலுடன் நகைச்சுவைக் கலந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மஹேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ளார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்
மேலும், இந்தப் படத்தில் ஜான்சி, முரளிதர் கௌட், ஆமினி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், ஓ சுகுமாரி எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆக. 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
The OTT release date for Aishwarya Rajesh's film Oh Sukumari has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.