FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம்: சாதனைப் படைத்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே சாதனைப் படைத்திருப்பது பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 5:35 pm IST
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
பகிர்:

இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையை 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' தனதாக்கியுள்ளது.

டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இத்திரைப்படம், உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாளைக்கு முன்பாக ஜூலை 30ஆம் தேதி இந்தியாவில் வெளியானது.

இப்படத்தில் மீண்டும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ்-வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இவர்களுடன் ஜேக்கப் பாட்டலோன், க்ரோண்டன் மற்றும் சாடி சின்க் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் 38-வது திரைப்படமான இப்படத்தை கெவின் ஃப்கி மற்றும் அமி பாஸ்கல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 462 கோடி வசூல் செய்துள்ளது.

ஜூலை 17ஆம் தேதி வெளியாகி ரூ. 189 கோடி வசூலித்த கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' மற்றும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த 'அப்செஷன்' ஆகிய படங்களை இப்படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமாக 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' உருவெடுத்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுளளது.

summary

"Spider-Man: Brand New Day", featuring actors Tom Holland and Zendaya, has earned over Rs 400 crore in India at the box office, emerging as the highest-grossing Hollywood film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments