ஓணம் வெளியீட்டிலிருந்து விலகும் துல்கர் சல்மான்?
துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்பட வெளியீடு குறித்து...
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஐயம் கேம் திரைப்பட வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஐயம் கேம். இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
சூதாட்டத்தை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் அதன் எடிட்டிங் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
ஓணம் வெளியீட்டை முன்னிட்டு, இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால் இதனை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், துல்கர் ரசிகர்களிடம் அதிருப்தி உருவாகியுள்ளது.
ஓணம் வெளியீடாக நடிகர் பிருத்விராஜின் கலீஃபா, நடிகர் நிவின் பாலியின் பத்லேஹம் குடும்ப யூனிட் ஆகியவைத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reports indicate a change in the release of the film Iam Game, starring actor Dulquer Salmaan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.