நல்ல விமர்சனங்களைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!
வரவேற்பைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்....
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் முதல்நாள் முதல் காட்சியைக் கண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல குடும்பத் திரைப்படம் என்கிற விமர்சனங்களை அதிகம் பெற்று வருவதால் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
சில திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் இந்த வார இறுதி வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் வணிக ரீதியாகவும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நல்ல தொகையை ஈட்டலாம் எனத் தெரிகிறது.
The film Viswanath and Sons, starring actor Suriya, is receiving a positive reception.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.