உணர்ச்சிப்பூர்வமான கிளைமேக்ஸ்... சிந்து பைரவி தொடர் 410 நாள்களுடன் நிறைவு!
சிந்து பைரவி தொடர் 410 நாள்களுடன் நிறைவடைந்தது தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர் 410 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்.
இத்தொடரில் நடிகர் திரவியம் நாயகனாகவும் பவித்ரா பி நாயக் நாயகியாகவும் நடித்து வந்தனர்
Advertisement
Advertisement
மேலும் இந்தத் தொடரில், ஆர்த்தி சுபாஷ், ஆனந்த கிருஷ்ணன், சுமலதா மதன், காயத்ரி கிருஷ்ணன், சஹானா ஷெட்டி உள்ளிட்டோரும் நடித்து வந்தனர்.
கடந்த 2025 - ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரை, ஆண்டாள் அழகர், தேன்மொழி பிஏ, சின்ன தம்பி உள்ளிட்டத் தொடர்களை இயக்கிய இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன் இயக்கி வந்தார்.
குடும்ப போராட்டங்களுக்கு நடுவே மலரும் காதலை மையமாகக் கொண்டு சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், உணர்ச்சிப்பூர்வமான இறுதிக்கட்ட காட்சிகளுடன் சிந்து பைரவி தொடர், 410 எபிசோடுகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
The serial Sindhu Bhairavi Katcheri Aarambam, aired on Vijay TV, concluded after a run of 410 episodes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.