4 நாள்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 4 நாள்களில் செய்த வசூல் எவ்வளவு என்பது குறித்து...
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 4 நாள்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தைக் கண்டுகளித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
படத்துக்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் மாறியதால் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, படம் வெளியான 2 நாள்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. படம் வெளியான 2 நாள்களில் எப்படி ரூ. 100 கோடி வசூலானது என பலர் கேள்வி எழுப்பிய நிலையில், 4 நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
Production house reported on Tuesday (Aug. 18) that the film Viswanath and Sons has grossed over ₹150 crore within four days of its theatrical release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.