FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதற்குள் ரூ. 100 கோடியா? கொண்டாட்டமும் குழப்பமும்!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் குறித்து....

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 7:17 pm IST
பகிர்:

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் மாறியதால் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டும் இதுவரை ஆன்லைன் வாயிலாக 12 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் முதல் இரண்டு நாள்களிலேயே உலகளவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பலரும் இரண்டே நாள்களில் எப்படி இவ்வளவு தொகையை வசூலிக்க முடிந்தது? சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் சில திரைகளில் படம் வெளியாகவில்லை என்பதால் தமிழகத்தில் அதிகபட்சம் ரூ. 10 கோடிக்கும் குறைவாகவே முதல் நாள் வசூல் இருந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்கிற என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

It has been announced that actor Suriya's film Viswanath and Sons has grossed ₹100 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments