டாப்ஸியின் காந்தாரி பட டிரைலர்!
நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள காந்தாரி படத்தின் டிரைலர் குறித்து...
நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள காந்தாரி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டாப்ஸி பன்னு (39 வயது) தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆசி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோபிக்காமல் சென்றது.
Advertisement
Advertisement
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஷ்வக் சிங், சாயா கடம், ஸ்வஸ்திகா முகர்ஜி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தற்போது, இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையத்தில் குழந்தையைப் பிரிந்த தாயின் பாசப்போராட்டமும் குழந்தைக் கடத்தலை மையமாக வைத்தும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Taapsee Pannu 'Gandhari' movie trailer!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.