FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மாவாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை: பிரியா பவானி சங்கர்

தாய் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பிரியா பவானி சங்கர்...

பிரியா பவானி சங்கர்
பகிர்:

நடிகை பிரியா பவானி சங்கர் குழந்தைக்குத் தாயாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த இருமுடி கட்டு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவுக்கு மனைவியாகவும் பெண் குழந்தைக்கும் அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் அம்மாவாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பிரியா பவானி சங்கர், “இருமுடி” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. 20 வயதில் எனக்கு திருமணம் ஆகியிருந்தால், இந்நேரம் ஒரு குழந்தை இருந்திருக்கலாம். அதனால், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது, கதை எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதுதான் ஆரம்பத்தில் என்னுடைய முக்கியமான யோசனையாக இருந்தது.

Advertisement

Advertisement

“இருமுடி” கதையை முதன்முதலில் கேட்டபோதே அது மிகவும் அழுத்தமாகவும், அதே நேரத்தில் ஆன்மாவைத் தொடும் வகையிலும் இருந்தது. குறிப்பாக, கதையின் உணர்வும், கதாபாத்திரங்களின் பயணமும் என்னை மிகவும் கவர்ந்தன.

இயக்குநர் கதையை என்னிடம் கொடுத்தபோதே, கதை எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பது ஓரளவுக்கு எனக்கு தெளிவாகிவிட்டது. ஸ்கிரிப்டை படிக்கும்போது என் மனதில் உருவான காட்சிகளும், இயக்குநரிடம் கேட்டு உணர்ந்த விஷயங்களும் திரையில் அப்படியே வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.

ஒரு நடிகையாக எனக்கு அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வை சரியாகப் புரிந்துகொண்டு, அதை இயல்பாக திரையில் கொண்டு வர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் இருந்தது. “இருமுடி” எனக்கு ஒரு கதாபாத்திரம் மட்டுமல்லாமல், மனதிற்கு நெருக்கமான ஒரு அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Priya Bhavani Shankar has stated that she has no hesitation in playing the role of a mother.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments