இருமுடி எனக்கு சிறப்பான திரைப்படம்: பிரியா பவானி சங்கர்
இருமுடி திரைப்படம் குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்...
நடிகை பிரியா பவானி சங்கர் இருமுடி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “காவேரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருக்கின்றன. அதனால், காவேரி கதாபாத்திரம் எனக்கும் ஸ்பெஷல்.
Advertisement
Advertisement
நடிகர் ரவி தேஜாவுடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்.
படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்கள், நம்முடன் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடும் பயணங்களில் இதுவும் ஒன்று.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.