25-வது நாள்! சிறைக்கு இது நடந்திருக்கலாம்!
சிறை திரைப்படம் குறித்து....
சிறை திரைப்படம் திரையரங்குகளில் 25 நாள்களைக் கடந்துள்ளது.
நடிகர்கள் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்மா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது.
சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்று வெற்றியும் பெற்றனர்.
Advertisement
Advertisement
ஆனால், இப்படம் வணிக ரீதியாக ரூ. 18 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சகர்களால் 2025 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் குறைந்தது ரூ. 50 கோடி வசூலையாவது அடைந்திருக்கலாம் என்றும் அப்படி நடந்திருந்தால் சிறிய பட்ஜெட் படங்களின் மீது தயாரிப்பாளர்களுக்கு கவனம் அதிகரித்திருக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்திருக்கலாம் என்றும் ஆதங்க பதிவுகள் தென்படுகின்றன.
sirai movie completed 25th day in theatres
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.