FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிச்செல்லும் திரைப்படங்கள்!

ஜன நாயகன் வெளியீட்டால் சிக்கலைச் சந்திக்கும் பிற திரைப் படங்கள் பற்றி...

ஜன நாயகன் போஸ்டர்
பகிர்:

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்ற நிலையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சில படங்களின் வெளியீடும் தள்ளிச் செல்கின்றன.

ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம். இதற்கு மேலும் இழுபறி வேண்டாமென தயாரிப்பு நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இப்படத்தை ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆம் தேதி வெளியிடத் திடமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் கடைசித் திரைப்படத்தைக் கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், ஜன நாயகன் வெளியீடு காரணமாக இந்த மாத இறுதியில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

முக்கியமாக, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படமும் வெளியீட்டுத் தேதியை மாற்றலாம் எனத் தெரிகிறது.

The release of Vijay's film Jananayagan has caused some other films to postpone their release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments