இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பாட வேண்டும்: வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமி இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் குறித்து பேசியுள்ளார்...
தேசிய விருது அறிவிக்கப்பட்ட பாடகி வைக்கம் விஜயலட்சுமி இளையராஜா இசையமைப்பில் பாட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி மலையாளப் படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து நல்ல பாடல்களைப் பாடி வருகிறார்.
தமிழிலும் குக்கூ, வீரசிவாஜி போன்ற திரைப்படங்களில் உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடி தன் தனித்துவமான குரலால் பாராட்டுகளைப் பெற்றார்.
Advertisement
Advertisement
தற்போது, நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'ஏ.ஆர்.எம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் விஜயலட்சுமி பாடிய, "அங்கு வானம் கோணிலு" என்ற பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வைக்கம் விஜயலட்சுமி, “அங்கு வானம் கொனிலு-ல் உயர்ந்து வா, நீ இந்த உலகை வென்று உயர்ந்து வா என்கிற பாடல் வரிகள் என் சொந்த வாழ்க்கையிலும் என்னை ஊக்கப்படுத்தியது. அந்தப் பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், வைக்கம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மம்மூட்டியுடன் இந்த விருதைப் பெறப்போவதில் கூடுதல் சந்தோஷம். இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையமைப்பிலும் பாட வேண்டும் என்பது என் ஆசை” எனத் தெரிவித்துள்ளார்.
National Award-winning singer Vaikom Vijayalakshmi has expressed her desire to sing a song composed by Ilaiyaraaja.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.