FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜென் ஸி ரசிகர்களையும் கவர்ந்த இளையராஜாவின் கல்யாண விருந்து!

கல்யாண விருந்து பாடல் ஹிட் அடித்துள்ளது...

39 வினாடிகள் முன்பு
பகிர்:

இளையராஜா இசையமைப்பில் உருவான கல்யாண விருந்து பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தற்போது தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகியாக நடித்த இப்படத்திற்கு, “டோரதி” எனப் பெயரிட்டுள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில், இளையராஜா இசையமைத்து, எழுதிய இப்படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து பாடல் வெளியாகி ரசிகர்களைக் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது.

Advertisement

Advertisement

ஆந்தோனி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இளையராஜாவே எழுதிய பாடல் என்பதால் இதன் வரிகளும் துல்லியமாகக் கேட்கும்படி இருப்பதால் இதனைக் குறிப்பிட்டும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

மேலும், இதுவரை யூடியூபில் 22 லட்சம் பார்வைகளைப் பெற்றதுடன் நல்ல காமெண்ட்களையும் பெற்றுள்ளது. பாடல் வரிகளும் குத்தாட்ட இசையும் விரைவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் இடம் பெறும் என்றும் இந்தாண்டின் ஹிட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிகிறது.

The song 'Kalyana Virundhu', composed by Ilaiyaraaja, is captivating fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments