FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சட்டைக்காரி நாவலை திருடி அன்பே டயானா உருவானதா? சர்ச்சைக்கு விளக்கமளித்த எழுத்தாளர்!

அன்பே டயானா திரைப்படம் சட்டைக்காரி நாவலை திருடி உருவாக்கப்பட்டதா என்பது குறித்து...

Updated On : 21 ஜூலை 2026, 7:57 pm IST
அன்பே டயானா போஸ்டர், சட்டைக்காரி நாவலுடன் எழுத்தாளர் கரன் கார்கி. - படங்கள்: முகநூல்/ பாரி இளவழகன், கரண் கார்கி.
பகிர்:

பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் சட்டைக்காரி நாவலை திருடி உருவாக்கப்பட்டதா என்ற சர்சைக்கு எழுத்தாளர் கரன் கார்கி விளக்கம் அளித்துள்ளார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆங்கிலோ இந்திய நாயகிக்கும் தென் தமிழக நாயகனுக்கும் நடைபெறும் கதையாக அன்பே டயானா உருவாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

எழுத்தாளர் கரன் கார்கி எழுதிய சட்டைக்காரி நாவலும் ஆங்கிலோ இந்திய பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் சிலர் இந்த நாவலை திருடிதான் படம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

எழுத்தாளரும் உடனடியாகப் பதிவிட்டதால் சர்ச்சை வெடித்தது. பின்னர், படத்தினைப் பார்த்த எழுத்தாளர் கரன் கார்க்கி இது குறித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நேற்று முழுக்க படப்பிடிப்பில் இருந்ததால், இரவுதான் படத்தைப் பார்த்தேன். பின்னர், இயக்குநர் - தயாரிப்பாளர் உடன் பேசினேன். இயக்குநரிடம் சட்டைக்காரி படித்துள்ளீர்களா எனக் கேட்கும்போது அவர் இல்லை எனக் கூறினார்.

பொதுவாகவே சட்டைக்காரியும் அன்பே டயானாவும் வேறு வேறானது. சட்டைக்காரியில் ஆங்கிலோ இந்திய பெண்ணின் முழு வாழ்க்கையும் கடந்த கால வரலாற்றையும் உழைக்கும் மக்களின் மூன்று காரசாரமான மனிதர்களின் கால்பந்து ஆட்டம், காதல், அன்பு, அரசியலைக் குறித்தும் பேசுபவை. அன்பே டயானா நிகழ்கால கதையைக் குறிக்கிறது. நகைச்சுவையாக ஒரு பாணியில் அதன் வாழ்வியலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

சட்டைக்காரி நாவலும் அன்பே டயானா படமும் வேறுவேறானது. சட்டைக்காரித்தான் இந்தப் படமும் என நான் சண்டையிடுவதற்கோ அல்லது வாதிட்டாலோ சட்டைக்காரியே என்னைக் கொன்றுவிடுவாள். இதனை இயக்குநருடன் சொல்லிவிட்டேன். எழுத்தாளரும் தோழர் ஒருவர் அன்பு மிகுதியால் அப்படி பதிவிட்டுள்ளார். படத்தில் பெரம்பூர் - ஆங்கிலோ இந்திய பெண் - கால்பந்தாட்டக்காரர் - ஆஸ்திரேலியாவுக்குப் போக நினைப்பவர் -கருப்பை நேசிக்கும் கதாநாயகி என சில பகுதிகள் நாவலில் இருப்பதுபோலவே இருப்பதால் அவர் கொந்தளிப்பில் அப்படி பதிவிட்டுள்ளார்.

என்னுடைய பல கதைகள் இங்கு திரைக்கதைகளாக மாறியுள்ளன. சில சில விஷயங்களை நீக்கிவிட்டு படத்தை எடுத்துவிடுவார்கள். வாழ்வை பணயம் வைத்துதான் படைப்பை உருவாக்கும் நிலையில் இருக்கிறோம். தமிழ்ச் சூழல் அப்படித்தான் இருக்கிறது. எட்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு ரூபாய்கூட ராயல்டி வந்ததில்லை. நன்றாகவே விற்கப்பட்டும் இந்த நிலைமை இருக்கிறது. இப்படித்தான் வாழ்க்கையை பணயம் வைத்து வாழ வேண்டியிருக்கிறது. ஒருவேளை எனக்குத் திரைத்துறை இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்திருக்க வேண்டியிருக்கும். அப்படியான சூழலில்தான் எனது படைப்பு திருடப்பட்டு விட்டதோ என்ற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அதில்தான் பதிவிட்டிருந்தேன். அன்பே டயானாவும் சட்டைக்காரி நாவலும் வேறுவேறானது எனக் கூறி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

summary

Was 'Anbe Diana' created by plagiarizing the novel 'Sattaikkari'? Writer karan karki clarifies the controversy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments