FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அஜயன் பாலாவின் மைலாஞ்சி: ஓடிடியில் வெளியீடு!

மைலாஞ்சி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 22 ஜூலை 2026, 7:20 pm IST
மைலாஞ்சி போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

அஜயன் பாலாவின் மைலாஞ்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அஜயன் பாலா மைலாஞ்சி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான மைலாஞ்சி திரைப்படம், காதலர் நாளை முன்னிட்டு வெளியானது.

Advertisement

Advertisement

அஜய் அர்ஜுன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The OTT release date for Ajayan Bala film Mailaanji has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments