சென்னை - 28 மூன்றாம் பாகம் திட்டத்தில் வெங்கட் பிரபு!
சென்னை - 28 திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை - 28 மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் திரைப்படமான சென்னை - 28 உள்ளூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி நட்பு, காதல் என சுவாரஸ்யமானத் திரைப்படமாகத் திரைக்கு வந்து வெற்றியைப் பெற்றது. இதில், நடிகர்கள் சிவா, ஜெய், பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கொண்டு இதன் இரண்டாம் பாகம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை - 28 திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் இதன் கதை முழுவதும் தாய்லாந்த்தில் நடப்பது போன்று எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, பட்டாயாவில் நடக்கும் கதையாக பார்ட்டி என்கிற திரைப்படத்தை வெங்கட் பிரபு 2018-ல் இயக்கினார். ஆனால், அது இன்று வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that a third installment of Chennai 28 is set to be made under the direction of Venkat Prabhu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.