FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜனநாயகன் படம் பார்க்க ரோகிணி திரையரங்கம் வந்த நடிகை த்ரிஷா

ஜனநாயகன் படம் வெளியான நிலையில் ரோகிணி திரையரங்கத்துக்கு படம் பார்க்க வந்திருக்கிறார் நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா - From video grab
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்க நடிகை த்ரிஷா, ரோகிணி திரையரங்குக்கு வந்திருக்கிறார்.

சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ளது ரோகிணி திரையரங்கம். தமிழகத்தில் காலை 9 மணி முதல் ஜனநாயகன் திரையிடப்பட்டு வரும் நிலையில் சுமார் 11 மணியளவில் நடிகை த்ரிஷா, தோழிகளுடன் திரையரங்குக்கு வருகை தந்துள்ளார்.

திரையரங்கில் த்ரிஷாவைப் பார்த்ததும், ஜனநாயகன் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், எதற்கும் பதிலளிக்காமல் த்ரிஷா திரையரங்குக்குள் சென்றுவிட்டார்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், நடிகை த்ரிஷா எங்கு படம் பார்க்கப் போகிறார், முதல் நாள், முதல் காட்சியை திரையரங்கில் காண வருவாரா என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ரோகிணி திரையரங்குக்கு நடிகை த்ரிஷா வந்திருந்தார்.

திரையரங்கில்... - எக்ஸ்

விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி படம் வெளியாவதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆவலுடன் படத்தை கண்டு ரசித்தனர்.

முதல்வராக பதவியேற்ற பிறகு படம் வெளியாகியுள்ளதால், படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனத் திரையிடப்பட்டது. இந்த காட்சி வரும்போது விஜய் ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்கு இடையே, தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்திருந்த படம் ஜனநாயகன். ஆனால், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தவெக தலைவர் என்ற முறையில், விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்து மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக தனிப்பெருங்கட்சியாக வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

தவெக தலைவராக படம் வெளியாவதில் சிக்கல்களை சந்தித்திருந்த ஜனநாயகன், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இந்த நாள் திருவிழாவாக அமைந்துள்ளது.

நடிகராக விஜய் நடிப்பல் வெளியான கடைசிப் படமாக ஜனநாயகன் பார்க்கப்படுவதால், அவரது ரசிகர்கள் பலரும், அதனை திரையரங்கில் சென்று காண வேண்டும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

summary

Actress Trisha visited Rohini Theatre to watch the movie Jananayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments