கனத்த இதயத்துடன்... கார் ரேஸிங்கிற்குத் தயாரான அஜித் குமார்!
பிரான்ஸ் கார் ரேஸிங்கிற்குத் தயாராகும் அஜித் குமார் குறித்து...
பிரான்ஸில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங்கிற்கு அஜித் குமார் தயாராகி வருவதாக அவரது அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
நடிகராக இருக்கும் அஜித் கார் ரேஸிங் மீதான பெரு விருப்பத்தினால் அதில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் (மே.30) அவரது தாயார் காலமானார்.
தனது தாயார் இறந்த தினத்தில் அஜித், “அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, இழப்புக்குப் பிறகு நான்கு நாள்களில் மீண்டும் கார் ரேஸிங்கிற்குத் தயாராகியுள்ளார். அடுத்த வாரம் பிரான்ஸில் நடைபெறும் போட்டியில் அவரது குழு பங்கேற்கிறது.
அஜித்குமார் கார் ரேஸிங் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் படப்பிடிப்பு, ரேஸிங்கில் பலமுறை காயத்தினால் அவதியுற்றாலும் அவர் தனது விடாமுயற்சியை விடுவதில்லை. தொடர்ச்சியாக ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பார். தற்போதைய அவரது பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Back at work with a heavy heart but life must go on! ajith kumar share racing post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.