தி ஒடிசி இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு தேதி!
தி ஒடிசி ஐமேக்ஸ் முன்பதிவு குறித்து...
தி ஒடிசி திரைப்படத்திற்கான இந்திய ஐமேக்ஸ் முன்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பிரபல கவிஞர் ஹோமர் எழுதிய ஒடிசி என்கிற கவிதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றுள்ளதால் வெளியீட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதைவிட ஆச்சரியமாக, இப்படத்தை முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் 20 லட்சம் அடிகள் வரை எடுத்துள்ளாராம். இதனை அளந்தால் 600 கி.மீ. நீளத்திற்குச் செல்லக் கூடியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை தான் இயக்கிய ஒவ்வொரு படங்களிலும் புதுமையான விஷயங்களைப் புகுத்திய நோலன், இப்படத்தில் முழுமையான ஐமேக்ஸ் காட்சியனுபவ விருந்தை அளிக்கவுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இந்திய ஐமேக்ஸ் திரைகளுக்கான முன்பதிவு வருகிற ஜூன் 8 ஆம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஐமேக்ஸ் திரைகளில் முன்னணியிலுள்ள பிராட்வே கோயமுத்தூர் (Broadway, Coimbatore (Laser Imax), பிவிஆர் பளாசோ சென்னை (VR Palazoo, Chennai (Laser Imax) ஆகிய திரைகளில் மிக விரைவாக முன்பதிவுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Information regarding the date for Indian IMAX advance bookings for the movie The Odyssey has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.