FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கருப்பு திரைப்பட ஓடிடி வெளியீடு எப்போது?

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அமேசான் பிரைம் தளம் பதிவிட்டுள்ளது.

Updated On : 7 ஜூன் 2026, 8:40 pm IST
சூர்யா
பகிர்:

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அமேசான் பிரைம் தளம் பதிவிட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.  சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் படங்களில் இந்தப் படமே அதிக வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் ஓடிடி வெளீயிடு தொடர்பாக படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் தளம் பதிவு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கருப்பு திரைப்படம் ஜூன் 12 அன்று பிரைம் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

summary

Amazon Prime has posted an update regarding the OTT release of the movie Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments