மோகன் லாலின் த்ரிஷ்யம் - 3 ஓடிடி வெளியீடு!
நடிகர் மோகன் லாலின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
மலையாள நடிகர் மோகன் லால் நாயகனாக நடித்து வெளியான “த்ரிஷ்யம் - 3” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன் லால் கூட்டணியில் உருவாகி வெளியான புதிய படம் “த்ரிஷ்யம் - 3”. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதே கதைகளத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியானது.
முதல் 2 பாகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் 3 ஆவது பாகத்திலும் அதே பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த மே 21 அன்று நடிகர் மோகன் லாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படம் வெறும் 7 நாள்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், “த்ரிஷ்யம் -3” திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இன்று (ஜூன் 13) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the film Drishyam 3, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.