மா இண்டி பங்காரம் இரண்டாம் பாகம் அறிவிப்பு!
மா இண்டி பங்காரம் - 2 குறித்து...
நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.
தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படம் குடும்பப் பின்னணி நடக்கும் ஆக்ஷன் கதையாக உருவாகியிருந்தது. சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இதுவரை இப்படம் ரூ. 60 கோடிக்கு அதிகமாக வசூலித்து சமந்தாவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. மேலும், சமந்தா தாயாகவுள்ளதால் ஓரிரு ஆண்டுகள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மா இண்டி பங்காரத்தின் இரண்டாம் பாகும் முதல் பாகத்தைவிட விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உருவாகும் என ராஜ் நிதிமோர் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
It has been announced that a sequel to the film Maa Inti Bangaram, starring actress Samantha, is in the works.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.