முகப்பு
செய்திகள்

121 நாள்களில் முடிக்கப்பட்ட கனா கண்டேனடி தொடர்! கவலையில் ரசிகர்கள்!

கனா கண்டேனடி தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 29 ஜூன் 2026, 4:19 pm IST
கண்டேனடி தொடர் காட்சி - படம்: விடியோ கிளிப்
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கனா கண்டேனடி தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்தது.

மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

கனா கண்டேனடி தொடரை விகடன் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்தத் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், கனா கண்டேனடி தொடர் கடந்த வெள்ளிக்கிழமை 121 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், கனா கண்டேனடி தொடர் நிறைவடைந்தது, ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் விருப்பத் தொடரை முடித்து விட்டதாகவும், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடரை முடித்து விட்டதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

summary

The serial Kana Kandenadi, which aired on Sun TV, concluded within a short period.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments