தந்தையான ஆதிக் ரவிச்சந்திரன்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மகன் பிறந்துள்ளார்..
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து, நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமானது. பின், இடைவெளிவிட்டு நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யாவை வைத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடி வசூலித்து வெற்றிப்படமானது.
அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரை வைத்து, ‘குட் பேட் அக்லி’ என்கிற திரைப்படத்தை ஆதிக் இயக்கினார். இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று, ரூ. 250 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, அஜித்தின் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் திருமணம் செய்திருந்தார். தற்போது, இந்த இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித்தின் இயக்குநர் என்பதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
Director Adhik Ravichandran and Aishwarya have been blessed with a baby boy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.