எல்லாமே அவதூறு... ரவி மோகனுக்கு பதிலளித்த மாமியார்!
ரவி மோகன் பேச்சுக்கு சுஜாதா விஜயகுமார் பதில்...
நடிகர் ரவி மோகனின் பேச்சுக்கு அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் தன் விவாகரத்து முடிவு குறித்து அளித்த பேட்டியில், “எனது பிள்ளைகளைப் பார்க்க விடுவதில்லை. எப்போதும் பாதுகாவலர்களுடனே வருகிறார்கள். கையை அறுத்துக்கொள்வேன் என ஆர்த்தி மிரட்டித்தான் என்னைத் திருமணம் செய்தார். பல ஆண்டுகளாக அவர்களின் வீட்டில் மரியாதை இழந்து வாழ்ந்து வந்தேன். என் அம்மா, அப்பா இந்தக் குடும்பமே வேண்டாம் என கெஞ்சினார்கள். யார் பேச்சையும் கேட்காமல் போய் சிக்கிகொண்டேன். என் முன்னாள் மனைவியின் குடும்பத்தின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். என் மகன்களை நான் பார்க்க வேண்டும். எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ அதன்பின்பே சினிமாவில் நடிப்பேன்” என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனால், பலரும் ரவி மோகனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இவரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் பேட்டியளித்தார். அதில், “ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும் விஷயங்களை இப்போது மீண்டும் பேசியுள்ளார். எல்லாமே அவதூறுகள்தான். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதுகுறித்து அதிகம் பேசவும் முடியவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் சொன்னதற்கு கண்டிப்பாக பதிலளிப்போம். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என நாங்கள் நினைப்பதற்கு காரணம், எங்கள் பேரன் 10 ஆம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பேரன்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். மேலும், அவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதால்தான் இதனைப் பெரிதுபடுத்தவில்லை.
Advertisement
Advertisement
எங்கள் தரப்பிலிருந்து கடந்த 2 ஆண்டுகளாக எதுவும் இதுகுறித்து பேசுவதில்லை. நாங்கள் சைபர் தாக்குதல்களையும் செய்யவில்லை. 2008 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், ரவி மோகன் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். மிரட்டிலில் இந்தத் திருமணம் நடக்கவில்லை. அதில் அவரே தன் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்தால் மற்ற பெண்கள் துணைக்கு வருவார்கள். குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதனால்தான். சட்டப்படி இதனை நாங்கள் எதிர்கொள்வோம்.” எனக் கூறியுள்ளார்.
sujatha vijayakumar answered to actor ravi mohan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.