FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் அஸ்மிதாவுக்கு உற்சாக வரவேற்பு! மகனைக் கண்டு நெகிழ்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு வைரலாகும் அஸ்மிதாவின் விடியோ குறித்து...

49 வினாடிகள் முன்பு
மகனுடன் அஸ்மிதா - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அஸ்மிதாவுக்கு அவரின் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி, 2 மாதங்களுக்குப் பிறகு தனது மகனைப் பார்ப்பதால், ஆரத்தழுவி நெகிழ்ச்சி அடைந்தார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக அக்‌ஷிதாவுடன் சேர்ந்து, அஸ்மிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

அஸ்மிதா - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அஸ்மிதா, தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் ஆடல் பாடலுடன் அஸ்மிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனது 3 குழந்தைகளையும் 2 மாதங்களுக்குப் பிறகு அஸ்மிதா பார்த்தார். இதனால் ஆனந்த கண்ணீருடன் தனது குழந்தையான இளைய மகனை ஆரத்தழுவிக்கொண்டார்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கணவரின் உதவியின்றி தனியொரு தாயாக 3 பிள்ளைகளை வளர்த்து வரும் அஸ்மிதா, பிக் பாஸ் வீட்டில் பல இடங்களில் தனது பிள்ளைகள் குறித்துப் பேசிப் பதிவு செய்துள்ளார்.

இதனால், இந்த விடியோவைக் கண்ட ரசிகர்கள், அஸ்மிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறாமல் வெளியேறி இருந்தாலும், ஒரு தாயாக அஸ்மிதா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

summary

An enthusiastic welcome for Bigg Boss contestant Asmitha! She gets emotional upon seeing her son!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.