FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொலைக்காட்சியில் வெளியாகும் மொத ராத்திரி! எதில், எப்போது பார்க்கலாம்!

மொத ராத்திரி படத்தின் தொலைக்காட்சி வெளியீடு குறித்து...

55 வினாடிகள் முன்பு
மொத ராத்திரி போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் ரிஷிகாந்தின் மொத ராத்திரி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

வணிக ரீதியாகவும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, இரண்டாவது இடத்தைப் பிடித்து டிரெண்டானது.

இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படம் சோனி விழா சேனலில் நவ. 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Actor Rishikanth's film 'Modha Rathiri' is set to be broadcast on television.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.