தமிழகத்தில் சாதனை செய்த முதல் பாலிவுட் திரைப்படம்!
ராமாயணா வசூல் குறித்து...
ராமாயணா திரைப்படம் தமிழகத்தில் பெரிய வசூலைச் செய்துள்ளது.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகளின் பிரம்மாண்டம் ஆகியவை ரசிகர்களின் ரசனைக்குத் தீனியாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். முக்கியமாக, ஐமேக்ஸ் திரை அனுபவம் அபாரமாக இருந்ததையும் குறிப்பிடுகின்றனர்.
மேலும், ராமாயணா இதுவரை உலக அளவில் ரூ. 1400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பாலிவுட் திரைப்படம் தமிழகத்தில் 50 கோடியை வசூலித்தது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையைச் செய்து ராமாயணா அசத்தியுள்ளது.