முகப்பு

ரஷ்மிகாவின் மைசா வெளியீடு ஒத்திவைப்பு!

மைசா திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது...

18 வினாடிகள் முன்பு
ரஷ்மிகாவின் மைசா வெளியீடு ஒத்திவைப்பு!
நடிகை ரஷ்மிகா மந்தனா
பகிர்:

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான மைசா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பான் இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகை ரஷ்மிகா தற்போது மைசா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படம் வருகிற நவ. 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாக இருந்த நிலையில், அத்தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

The release of Rashmika Mandana starrer Maisa has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.