கர்நாடக சங்கீதம் கற்கும் ரஷ்மிகா!
எம். எஸ். சுப்புலட்சுமி திரைப்படத்திற்காக ரஷ்மிகா இசை கற்கிறார்...

எம். எஸ். சுப்புலட்சுமி திரைப்படத்திற்காக நடிகை ரஷ்மிகா கர்நாடக சங்கீத இசையைக் கற்று வருகிறாராம்.
இந்திய இசை வரலாற்றில் மிக முக்கியமானவர் எம். எஸ். சுப்புலட்சுமி. கர்நாடக இசைக் கலைஞராக மொழி, எல்லை, தலைமுறைகள் என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை இன்றுவரை பயணித்து வருகிறது.
பல இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்க பல நிறுவனங்கள் முயன்ற நிலையில், மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தை கௌதம் தின்னுரி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். அல்லு அரவிந்த் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகை ரஷ்மிகா கர்நாடக சங்கீதத்தைக் கற்ற ஆரம்பித்துள்ளாராம். எம். எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் ஓரளவு கர்நாடக சங்கீதத்தையும் அதன் ராகங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.