முகப்பு

மாநாடு நான் சம்பாதித்த உயர்ந்த செல்வம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

மாநாடு திரைப்படம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது...

28 வினாடிகள் முன்பு
மாநாடு நான் சம்பாதித்த உயர்ந்த செல்வம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
நடிகர் சிலம்பரசன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
பகிர்:

மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

ரூ. 100 கோடி வரை வசூலித்து மீண்டும் சிம்புவின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஹிட்டாக அமைந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்ட இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், “மாநாடு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாள்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும். ஆத்ம திருப்தி தந்த அப்படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்புத் தம்பி சிலம்பரசன் டி. ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு, மரியாதைக்குரிய எஸ். ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.

காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக 'மாநாடு' அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்.. தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம். எஸ்டிஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Suresh Kamatchi, the producer of the film Maanaadu, has shared a post regarding the movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.