முகப்பு

பாகிஸ்தான் இணையத் தொடரை வெளியிடக் கூடாது! நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாகிஸ்தானின் இணையத் தொடர் இந்தியாவில் வெளியிடக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...

பாகிஸ்தான் இணையத் தொடரை வெளியிடக் கூடாது! நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
பாகிஸ்தானின் இணையத் தொடர் இந்தியாவில் ஒளிப்பரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்... - கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் இணையத் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள “ஜோ பச்சே ஹைன் சங்க் சமேத் லோ” எனும் இணையத் தொடர் வரும் டிச. 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும், இதுதான் நெட்பிளிக்ஸில் வெளியாகும் பாகிஸ்தானின் முதல் இணையத் தொடராகும்.

இந்த நிலையில், இந்த இணையத் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு, மத்திய அரசு இன்று (நவ. 26) அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களைத் தடுக்கக் கூறி, கடந்த 2025 மே 8 ஆம் தேதி வெளியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த இணையத் தொடர் இந்தியாவில் வெளியாகுமா என்பது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

பிரபல பாகிஸ்தான் நடிகர்களான ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா ஆமிர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் புதிய தொடரானது, பாகிஸ்தானிய எழுத்தாளர் ஃபர்ஹத் இஷ்தியாகின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானின் இணையத் தொடர் இந்தியாவில் வெளியாகுவதைத் தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அகில இந்தியத் திரைப்படப் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that the central government has advised Netflix not to stream a Pakistani web series in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.