நாக சைதன்யாவின் விருஷகர்மா டிரைலர்!
விருஷகர்மா டிரைலர் வெளியீடு...

நடிகர் நாக சைதன்யாவின் விருஷகர்மா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. நடிகர் நாகர்ஜூனாவின் மகனான இவர் கவனித்தக்க வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இறுதியாக, இவர் நடித்த கஸ்டடி, தண்டெல் ஆகியவை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை.
நடிகை சமந்தாவைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்ததாக, விருஷகர்மா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் கதிர் தண்டு இயக்கிய இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஹாரர் பாணியில் உருவான இதன் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.