FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆவணப் படமாக உருவாகும் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் வாழ்க்கை வரலாறு!

பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் குறித்து...

14 அக்டோபர் 2026, 6:13 pm IST
எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் - AFP
பகிர்:

ஹாரி பாட்டர் புத்தகத்தின் மூலம் புகழ்பெற்ற பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப் படமாக உருவாக்கப்படும் என பிபிசி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.கே. ரௌலிங் (61 வயது) ஹாரி பாட்டர் என்ற புத்தகத்தை 26 ஜூன் 1997ல் வெளியிட்டார். அதன் பிரம்மாண்ட வரவேற்பில் அடுத்தடுத்து பாகங்களை வெளியிட்டார். கடைசியாக எழாவது பாகம் 21 ஜூலை, 2007ல் வெளியானது.

இது மட்டுமின்றி குழந்தைகளுக்கான புனைவுக் கதைகளையும் எழுதியுள்ளார். வயது வந்தவர்களுக்கான கதைகளையும் எழுதியுள்ள இவர் ஹாரி பாட்டர் முதலிரண்டு பாகத்தை தயாரிப்பாளராகவும் இருந்தார்.

Advertisement

Advertisement

பின்னர், அடுத்தடுத்த ஹாரி பாட்டர் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியும் அசத்தினார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல், சமூக பொருளாதரம் குறித்த 30 ஆண்டுகளை ஆவண படத்தில் காண்பிக்க பிபிசி முடிவெடுத்துள்ளது.

முதல் எபிசோடில் அவரது தொடக்க கால எழுத்துகள் குறித்து சொல்லப்பட்டிருக்கும். இளம் வாசகர்களை அவரது எழுத்து எப்படி பாதித்தது, கோடிக்கணக்கான வருமானம் எப்படி சேர்ந்தது என்பது இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது எபிசோடில் அவரது வளர்ச்சி, அரசியல் பிம்பம், பெண்ணியவாதி, பேச்சுகள், கலாசாரப் போர்கள், சுதந்திரம் பற்றியவையும் அவரது கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.

பிபிசி டூ, பிபிசி ஸ்காட்லாந்து சார்பாக ரோகன் ஸ்காட்லாந்து தயாரிக்கிறார். ஐபிளேயர் தளத்தில் ஒளிபரப்பாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கடந்த 30 ஆண்டுகால இலக்கிய, திரைப்பட வரலாற்றில் ஜே.கே. ரௌலிங்கின் பங்கு அதிகமானது என பிபிசி வரலாற்று ஆணையத் தலைவர் சைமன் யங் கூறியுள்ளார்.

summary

BBC announces two-part documentary on J K Rowling's life, legacy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments