60 வயதில் அறிமுகமான வத்சலா ராஜகோபால் 93 வயதில் காலமானார்!
மணிரத்னம் படத்தில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் காலமானது குறித்து...
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது மக்களின் அஞ்சலிக்காக பல்லாவரத்தில் அவரது வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் பிறந்து வளந்தவர் வத்சலா. பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, 1953ல் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் வேலை செய்த அலுவலகத்திலேயே இயக்குநர் கே. பாலசந்தரும் பணியாற்றியுள்ளார். கார்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்திய ரசிக ரங்கா எனும் தியேட்டர் குரூப்பில் இணிந்து நடித்துள்ளார்.
அவரது நாடக மேடையில் கவனம் ஈர்த்ததால் இயக்குநர் மணி ரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
400 திரைப்படங்களுக்கு மேலாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் சதீலீலாவதி, ரிதம், ரோஜா, அந்நியன், வின்னர், பட்டியல் என பல படங்களில் நடித்துள்ளார்.
தொலக்காட்சிகளில் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் கதை நேரம் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
Vatsala Rajagopal, who made her film debut at 60 with Roja, dies at 93
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.