FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழம்பெரும் மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார்! கேரள முதல்வர் இரங்கல்!

தேசிய விருது பெற்ற பழம்பெரும் மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார்...

23 செப்டம்பர் 2026, 5:34 pm IST
பழம்பெரும் மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார் - எக்ஸ்
பகிர்:

மலையாள திரைப்படம் மற்றும் நாடகத்துறையின் பழம்பெரும் நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் மலையாள மேடை நாடகங்களின் மூலம் மக்களிடையே நன்கு அறியப்படும் பழம்பெரும் நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் (வயது 83) புதன்கிழமை (செப். 23) காலை உடல் நலக் குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1961 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற மேடை நாடகங்களில் மூலம் அறிமுகமான நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் பழம்பெரும் மலையாள திரைக்கதை எழுத்தாளர்கள் கே.டி. முகமது, எம்.டி. வாசுதேவன் நாயர், டி. தாமேதரன், திக்கோடியன் ஆகியோரின் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

நடிகை சாவித்திரி ஸ்ரீதரனின் மேடை நாடகங்கள் மக்களிடையே பிரபலமான நிலையில், அனியாரா எனும் நாடகத்திற்காக சிறந்த நடிகைக்கான சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்றார். மேலும், இவர் 2 முறை சிறந்த மேடை நடிகைக்கான கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான எம்.டி. வாசுதேவனின் கடவு எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமான நடிகை சாவித்திரி, மேரா நாம் சாஜி, வைரஸ், மேட் இன் சைனா போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இத்துடன், நடிகை சாவித்திரி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் சக்கரியா முகமதின் “சுடானி ஃபிரம் நைஜீரியா” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (சிறப்புப் பிரிவு) வென்றிருந்தார்.

இந்த நிலையில், நடிகை சாவித்திரி ஸ்ரீதரனின் மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ஏராளமான திரைப்பட நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

summary

Savithri Sreedharan, a veteran actress of the Malayalam film and theatre industries, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments