அதிக ஊதியம் பெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பட்டியல்! முதலிடத்தில் யார்?
அதிக ஊதியம் பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது குறித்து...
அதிக ஊதியம் பெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திரைத்துறை நட்சத்திரங்கள் தொகுத்து வழங்குவதால், அவர்களுக்கான ஊதியமும் திரைத்துறைக்கு இணையாக கொடுக்கப்படுகிறது.
அதாவது நடிகர் ஷாருக்கான் அல்லது நடிகர் பிரபாஸ் ஒரு திரைப்படத்திற்கு பெறும் ஊதியத்தை தொலைக்காட்சியில் ஒரு சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நட்சத்திரத்துக்கு அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர்.
சமீபத்தில் சோனிலிவ் நிறுவனத்தில் ஒளிபரப்பாகவுள்ள கிரைம் நிகழ்ச்சியின் 15 எபிஸோட்களை தொகுத்து வழங்க அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 90 கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் ஊதியம் பெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பட்டியலில் அஜய் இணைந்துள்ளார்.
இப்பட்டியலில் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் இவர் ஒரு சீசனுக்கு ரூ. 150 கோடி பெறுகிறார். வார இறுதியில் இரு நாள்களுக்கு மட்டுமே இவருக்கான படப்பிடிப்பு நடக்கும்.
இதற்கு அடுத்தபடியாக நடிகர் அமிதாப் பச்சன் இருக்கிறார். குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவருக்கு ரூ. 100 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் அஜய் தேவ்கன், சோனி டிவியில் கிரைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவருக்கு ரூ. 90 கோடி ஊதியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
காஃபி வித் கரண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கரண் ஜோஹர் ரூ. 25 கோடி பெறுகிறார். இதேபோன்று நடிகர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு ரூ. 12 - 14 கோடி ஊதியமாக கொடுக்கப்படுகிறது.
highest paid TV show hosts Who is in the top spot
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.