ரோபோ சங்கர் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார்!
ரோபோ சங்கர் நடித்த கதாபாத்திரம் வைரல் ஆகியுள்ளது...
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் நடித்த கதாபாத்திரம் மீம்களாக மாறி சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ’மாரி’ படத்தின் மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வாயை மூடி பேசவும், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் பேசப்படும் நடிப்பை வழங்கினார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிப்படங்களில் ஒன்றான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் உதவியாளராக நகைச்சுவை ரௌடி கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். அப்போது அவர் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து, 2025-ல் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சில நாள்களாக சமூக வலைதளங்களில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் நடிகர் ரோபோ சங்கர் இடம்பெற்ற காட்சிகளை மீம்களாக மாற்றி அதில் சாய் அபயங்கரின் கருப்பு பாடல் வரிகளை இணைத்து வைரலாக்கி வருகின்றனர். ரோபோ சங்கரின் உடல் மொழியில் இருக்கும் கெத்தான தோற்றத்தை வைத்து விதவிதமாக மீம் கிரியேட்டர்ஸ் விடியோக்களை வெளியிட்டு தொடர்ந்து ரோபோ சங்கரை வைரலில் வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமாக, ரசிகர் ஒருவர் ரோபோ சங்கரின் மீம் ஒன்றை உருவாக்கி இப்போது சொர்க்கத்திலிருந்து ரோபோ சங்கர் பெருமையாக இந்த வைரல்களை பார்த்துக்கொண்டிருப்பார் என்கிற விடியோவை வெளியிட்டார். இதனைக் கண்ட ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இதயக்குறியீட்டை காமெண்ட் செய்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். பல ரசிகர்களும், நடிகர் ரோபோ சங்கர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தன் மீம்களை நினைத்து மகிழ்ந்திருப்பார் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The character played by the late actor Robo Shankar has turned into memes and is dominating social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.