FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தியோலினா, தியான் லியோ... குழந்தைகளுக்குப் பெயரிட்ட கவின்!

நடிகர் கவின் தன் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ளார்...

3 செப்டம்பர் 2026, 6:10 pm IST
நடிகர் கவின்
பகிர்:

நடிகர் கவின் தன் இரட்டைக் குழந்தைகளுக்கு பெயரிட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின், தனக்கென நல்ல வணிகத்தையும் வைத்திருப்பதால் இவர் நடிக்கும் திரைப்படங்களின் ஓடிடி உரிமம் சிறப்பான தொகைக்கே விற்கப்படுவதால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இறுதியாக, நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்தை வெற்றியைப் பெறவில்லை. மேலும், விக்ரணன் அசோக் இயக்கிய மாஸ்க் படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

அண்மையில், நடிகை நயன்தாராவுடன் இவர் நடித்த ஹாய் திரைப்படம் வெளியாகி அதுவும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அடுத்ததாக, நம்ம வீட்டு பிள்ளை என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நடிகர் கவின் மகனும் மகளுமாக இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார். தற்போது, மகனுக்கு தியான் லியோ கவின் என்றும் மகளுக்குத் தியோலினா கவின் என்றும் பெயரிட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

Actor Kavin has announced the names given to his twins.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments